அரசு மருத்துவர்களுக்கான 50% இட ஒதுக்கீடு ரத்து - அன்புமணி கண்டனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

முதுநிலை மருத்துவப் படிப்பில் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை பறித்திருக்கும் திமுக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  அரசு மருத்துவமனைகளில் போதிய எண்ணிக்கையில் மருத்துவர்கள் இருப்பதாகக் கூறி, இந்த ஒதுக்கீடு நிறுத்தப்பட்டால், அரசு மருத்துவமனைகளுக்கு பல்வேறு துறைகளில் சிறப்பு மருத்துவர்கள் தேவைப்படும் போது, உடனடியாக மருத்துவர்களை உருவாக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு தடையில்லாமல் தொடர வேண்டும் என தமிழக அரசை அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். போராடி பெற்ற இந்த ஒதுக்கீட்டை தமிழக அரசு நீர்த்து போக செய்வது வருத்தமளிப்பதாகவும் அன்புமணி ராமதாஸ் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

varient
Night
Day